Friday : March 14, 2025
4 : 31 : 11 PM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

ஜெயலலிதா மீது அவதூறு பேச்சு! முன்னாள் திமுக எம்எல்ஏ வி.பி.ராஜன் மீதான வழக்கு ரத்து !!!

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராஜன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது .
ராஜபாளையம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் வி பி ராஜன் . கடந்த 2013 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இவர் மீதான அவதூறு வழக்குகளை திரும்ப பெறுவதாக அரசு உத்தரவிட்டிருந்தது. இருந்தபோதிலும் வழக்கு ரத்து செய்யப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் விபி ராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி வேல்முருகன், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராஜன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.


https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *