Saturday : March 15, 2025
04 : 53 : 21 AM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

விஜய் கட்சியுடன் கூட்டணி? 2026 தேர்தல் தொடர்பாக அதிமுக மா.செக்கள் கூட்டத்தில் பரபர ஆலோசனை!!!

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. 2026 சட்டசபை தேர்தல், கூட்டணி வியூகம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி வருகிறார். மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.



நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அந்தக் கூட்டணி பரிதாபகரமான தோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. தொடர் தோல்விகளால் அதிமுக திணறி வரும் நிலையில், ஓபிஎஸ், சசிகலா இணைப்பு தொடர்பான குரல்கள் எழுந்து வருகின்றன, மேலும் அண்மையில், நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழக மாநாட்டை நடத்தினார்.


இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் அதிமுக மா.செக்கள் ஆலோசனைக் கூட்டத்தில், நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து விவாதிக்கப்படுவதாக தெரிகிறது. விஜய்யின் அரசியல் பிரவேசத்தால், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு பாதிப்பு வருமா? தவெக உடன் கூட்டணி அமைக்கலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் கூட்டணிக்கு தயாராக இருக்கும் நிலையில், அதுகுறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், அதுவரை மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவது குறித்தும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும், டிசம்பரில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பாக உட்கட்சி தேர்தலை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் இன்று அதிமுக மா.செக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், 2026 சட்டசபை தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என அறிவித்தனர். இப்போது, அந்தக் கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் அரங்கில் பேச்சுகள் எழுந்துள்ளன. விஜய், மாநாட்டில் பேசிய கருத்துகளை நாதக, விசிக, திமுக, பாஜக என பல கட்சிகள் விமர்சித்து வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலினே, விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் அண்மையில் விமர்சித்தார். ஆனால், அதிமுக, விஜய்யை நட்பு சக்தி என்ற பார்வையிலேயே அணுகுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், அதிமுகவின் இன்றைய ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *