Friday : March 14, 2025
5 : 20 : 36 PM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

“முஸ்லிம்களின் குடியுரிமையை சிஏஏ பறிக்காது” - அமித் ஷா பேச்சு!!!

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

 “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாடு முழுவதும் வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த சட்டம் முஸ்லிம்கள் உட்பட யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லை. இது இந்து, சமண, சீக்கிய, பௌத்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டமாகும்” என மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் 188 அகதி சகோதர - சகோதரிகளுக்கு குடியுரிமை சான்றிதழ்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கினார். இந்த நிகழ்வில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அமித் ஷா தனது உரையில் தெரிவித்தது. “குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் குடியேறியுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு குடியுரிமை வழங்குவது மட்டுமல்ல, லட்சக்கணக்கான அகதிகளுக்கு நீதி மற்றும் உரிமைகளை வழங்குவதாகும். முந்தைய அரசுகளின் திருப்திப்படுத்தும் கொள்கையின் காரணமாக, 1947 முதல் 2014 வரை நாட்டில் தஞ்சம் புகுந்த மக்களுக்கு அவர்களின் உரிமைகளும் நீதியும் கிடைக்கவில்லை.

இது குடியுரிமை வழங்குவதற்கான சட்டம். நமது சொந்த நாட்டு மக்கள் தங்களின் சொந்த நாட்டிலேயே ஆதரவற்ற நிலையில் வாழ்கிறார்கள். இதை விட துரதிர்ஷ்டவசமானதும் முரண்பாடானதும் என்ன இருக்க முடியும்? திருப்திப்படுத்தும் கொள்கை காரணமாக பல ஆண்டுகளாக செய்ய முடியாததை பிரதமர் மோடி செய்து, 2019-ல் இந்த சட்டத்தை கொண்டு வந்தார்.

2019-ம் ஆண்டில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், நாட்டில் சிறுபான்மையினர் தூண்டப்பட்டதால் கலவரங்கள் ஏற்பட்டு, இந்தக் குடும்பங்களுக்கு 2024 வரை குடியுரிமை கிடைக்கவில்லை. சிஏஏ குறித்து நாடு முழுவதும் வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லை. இது இந்து, சமண, சீக்கிய, பௌத்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டமாகும். இன்றும் சில மாநில அரசுகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. நாடு முழுவதும் உள்ள அகதிகள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தயங்க வேண்டாம். இது அவர்களின் வேலைகள், வீடுகள் போன்றவற்றை முன்பு போலவே வைத்திருக்கும்.

எதிர்க்கட்சிகள் உங்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும். ஆனால், நீங்கள் பயப்பட வேண்டாம். சிறுபான்மையினரை தவறாக வழிநடத்துபவர்கள் உங்களுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த சட்டத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லை. ஆனால், இப்போது குறைந்தபட்சம் அதை அமல்படுத்துவதில் மோடி அரசுக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்று கூறினார்.

https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *