Saturday : March 15, 2025
01 : 35 : 43 AM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் புதிய கட்டிடத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாடு திட்டத்தின் படி ₹ 2.84 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் , 2 ஆய்வகங்கள் கொண்ட புதிய கட்டிடத்தை  காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனை முன்னிட்டு நாகர்கோவில் மாநகரமேயரும் தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளருமான திரு.ரெ.மகேஷ் அவர்கள் திருவிளக்கு ஏற்றிவைத்து , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் , கதர் மற்றும் கிராமத்தொழில் வாரிய அமைச்சர் , உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

உடன் மாநகர துணை செயலாளர் திரு.ராஜன், பகுதி செயலாளர் திரு.சேக் மீரான், இராஜாக்கமங்கல ஒன்றிய பெருந்துணை தலைவர் திரு.சரவணன் , மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் திரு.MJ ராஜன்,தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் திரு.பீட்டர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திரு.ராமசந்திரன்,மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.அருள் செல்வின் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *