Friday : March 14, 2025
5 : 50 : 01 PM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

திமுக இளைஞர் அணி மாநாட்டில் சுடரொளியை ஏற்றி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...1,500 டிரோன்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கண்காட்சி!!!

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

 

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டு, பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்துக்குச் சென்ற முதலமைச்சரும், திமுக தலைவருமான மு..ஸ்டாலின் மாநாட்டு சுடரை ஏற்றிவைத்தார். மாநாட்டையொட்டி கன்னியாகுமரியில் தொடங்கிய புல்லட் பேரணியும் திடலை வந்தடைந்தது. அவர்களை கையசைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உற்சாகமாக வரவேற்றார்.

 

அதைத் தொடர்ந்து 1,500 டிரோன்கள் பங்கேற்ற கண்காட்சியும் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சேலத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் கொண்ட ஒன்றாக பார்க்கப்படுகிறது. மாநில உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் நடைபெறவுள்ள இதில் லட்சக்கணக்கான திமுகவினர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

 

கனிமொழி எம்.பி. கட்சிக் கொடியையும், மாநாட்டுப் பந்தலை மாணவரணிச் செயலாளர் எழிலரசனும் திறந்து வைக்கவுள்ள நிலையில் காலை 10 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின், மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதன் பின்னர், தீர்மானங்கள் வாசிப்பு, மொழிப் போர் தியாகிகளின் படத்திறப்பு, திமுகவின் முன்னணித் தலைவர்கள் உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *