Friday : March 14, 2025
6 : 00 : 24 PM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி கிராமசபை கூட்டம் - தமிழக அரசு அறிவிப்பு !!!

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது . அந்த வகையில் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம் மற்றும் உள்ளாட்சிகள் தினம் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.அன்றைய தினத்தில் கிராம சபை கூடி அந்தந்த கிராமத்திற்கு தேவையான வசதிகள் குறித்த கோரிக்கைகள் எழுப்பப்பட்டு அரசு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது, ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு - செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, நமக்கு நாமே திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த கூட்டத்தில் 100 நாள் வேலை திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள், அவற்றின் முன்னேற்றம், பிளாஸ்டிக் தடை செய்தல், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதித்தல் மற்றும் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *