Saturday : March 15, 2025
01 : 55 : 36 AM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

பொங்கல் பரிசு ரூ.1000 கிடைப்பதில் நீடிக்கும் சிக்கல்? யாருக்கு கிடைக்கும் பொங்கல் பரிசு ?

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

2024ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


ரூ.1000 பொங்கல் பரிசு பணத்தை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெற முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைத்தாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவை  வழங்கப்படும்.


5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. அவை PHH, PHH-AAY, NPHH, NPHH-S,NPHH-NC

PHH - Priority Household
PHH - AAY ( Priority house hold- Antyodaya Anna Yojana)
NPHH - Non Priority Household
NPHH-S- Sugar
NPHH-NC - No Commodity

இதில், PHH என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும்.

PHH-AAY என்று குறிப்பிடப்பட்டிருந்தால் இந்த ரேஷன் கார்டுக்கு 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

NPHH-S என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு சர்க்கரை மட்டுமே வழங்கப்படும்.  NPHH-NC ரேஷன் அட்டைதார்களுக்கு எந்த பொருளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேலே குறிப்பிட்டுள்ள 3 வகையான PHH, PHH-AAY, NPHH அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என தெரிகிறது.


https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *